கவண் கல் !
காக்கைக் கூட்டத்தில் கல் விழுந்தது
கலைந்து போயின மாப்பிள்ளைக் காகங்கள் !
விழுந்தது என்னவோ என் சொல்லே!
சொன்னது என்னசுடு சொல்லா !
பேடிகளைத் தாக்கிடும் கவண் கல்லா !
பெண் என்ன இங்கே தனித்தீவா !
கரைகள் இரண்டை ஒதுக்கிவிட்டு
கடல் போய் சேரும் நதிகள் உண்டா !
ஆணுக்கு அம்மா அவன் வீட்டுத்தலைவி !
அப்பாவோ அடக்கி வாழும் தனிச்சீமான் !
பெண்ணைப் பெற்றவர் மட்டும் நடுவீதயிலா !
அன்புடன் பெண்ணுடன் சொந்தம் கொண்டாடிட
பெற்ற பாசம் பரிவாய்த் தந்திட தடைகள்
இங்கே பெண்ணைப் பெற்றவர்களுக்கு மட்டுமா !
பெற்றோர் சொத்து பெண்ணுக்கும் சமம்
கேட்டு வாங்கிட துணைக்குச் சட்டம்
"ஆணோ பெண்ணோ இரண்டே போதும் "
அடுக்கு மொழியில் கு.க விளம்பரம் !
கேட்டவர் பெண்ணுடன் விட்டிருந்தால்
வயோதிகம் தாங்கவும் , வைத்துக் காக்கவும்
பெண்ணாகப் பிறந்தவள் புறக்கணிப்பாளா !
பெண்களை பெற்றோர் ஒதுக்கப்பட்டால்!
மாப்பிள்ளை கழுகுகள் பிணம் தின்னுமா !
" சோறிட உழைத்தல் ஆணின் கடமை "
சொல்லிச்சென்றவர் மண்ணாகி விட்டார் !
அந்த உன்னதத் தொழிலின் பாதிச் சுமையையும்
பெண்ணின் சிலுவையென தூக்கி வைத்தப்பின்
அணுக்கு மட்டும் ஏன் இங்கே தணிச்சலுகை ?
அவன் பெற்றோர் மட்டும் ஒட்டிக்கொண்டு
அவனுடன் வாழ ஏன் கடைசிவரை உரிமை !
முகம் தூக்கிப்பார்கும் காக்கை கூட்டங்கள்
மறந்து என்னைப் பார்க்க
வாய் பொத்தி நின்றனர் என்னைப் பெற்றோர் !.
அவர்களைச் சற்றே ஒதுங்கச்சொல்லி
"என்னுடன் பெற்றோர் வந்திடுவார் .
அவர்களைப் போற்றிக் காத்திடல் என் பணி என்றேன் "
மாப்பிள்ளைக் காகங்கள் கலைந்து போயின !
விழுந்தது என்னவோ இச்சொல்லேதான் !
சொன்னது என்ன சுடு சொல்லா !
பேடிகளைத் தாக்கிடும் கவண் கல்லா !
No comments:
Post a Comment