விஷ்ணு என் தோழன் !
மறந்து போதல் இயற்கை !
மறைந்து போதல் இயற்கை !
மாய்ந்து போதல் இயற்கை !
நீ என் வாழ்வில் வந்தது
என் விதிப் பயனா ?
உன் கர்ம வினையா ?
என் கர்ம வினையா ?
விஷ்ணு தேவனே நீ வந்தாய்
நான் மகிழ்ந்தேன்
என் ஆத்ம தேடல் உன் உயிரில் நிலை கொண்டது !
உன்னை என் கண்மணியாக ! காதல் சிநேகிதனாக!
கண்டுகொண்டேன் ! கண்டுகொண்டேன் !
நீ என்னை என்னவாக கொண்டாய் ?
உன் உடல் வேதனை கண்டு
உடலும், உள்ளமுமம், உயிரும் ஒருங்கேத்துடிக்க
பொங்கி பிரவாகமாகிய என் அழுகை
உனக்கு வலித்ததா !
என்னை விட்டுச் சென்றாயா !
எனது உயிரை உறிஞ்சிச் சென்றயா !
நான் நடை பிணமாய் ..................
நிழல் காட்சியாய் உன் உருவம்
பிம்பமாய் , காட்சிப் பிழையாய் தெரிந்தாலும் நகர்ந்து ஓடுகிறேன் !
மீண்டும் மீண்டும் நீ(என் நாய் ) இல்லாத என் வீடு ............
உயிர்களுடன் காதலும், பாசமும்
கசிந்துருகி மகிழ மட்டும் இல்லை
ஒன்றும் இல்லாமல் கரைந்து போகவும்தான் என்று
எனக்கு உணர்த்திச் சென்றாயா ?
என் குருவே !உனக்கு சமர்ப்பணம் !
என் ஆத்ம சமர்ப்பணம் !
.
.
மறந்து போதல் இயற்கை !
மறைந்து போதல் இயற்கை !
மாய்ந்து போதல் இயற்கை !
நீ என் வாழ்வில் வந்தது
என் விதிப் பயனா ?
உன் கர்ம வினையா ?
என் கர்ம வினையா ?
விஷ்ணு தேவனே நீ வந்தாய்
நான் மகிழ்ந்தேன்
என் ஆத்ம தேடல் உன் உயிரில் நிலை கொண்டது !
உன்னை என் கண்மணியாக ! காதல் சிநேகிதனாக!
கண்டுகொண்டேன் ! கண்டுகொண்டேன் !
நீ என்னை என்னவாக கொண்டாய் ?
உன் உடல் வேதனை கண்டு
உடலும், உள்ளமுமம், உயிரும் ஒருங்கேத்துடிக்க
பொங்கி பிரவாகமாகிய என் அழுகை
உனக்கு வலித்ததா !
என்னை விட்டுச் சென்றாயா !
எனது உயிரை உறிஞ்சிச் சென்றயா !
நான் நடை பிணமாய் ..................
நிழல் காட்சியாய் உன் உருவம்
பிம்பமாய் , காட்சிப் பிழையாய் தெரிந்தாலும் நகர்ந்து ஓடுகிறேன் !
மீண்டும் மீண்டும் நீ(என் நாய் ) இல்லாத என் வீடு ............
உயிர்களுடன் காதலும், பாசமும்
கசிந்துருகி மகிழ மட்டும் இல்லை
ஒன்றும் இல்லாமல் கரைந்து போகவும்தான் என்று
எனக்கு உணர்த்திச் சென்றாயா ?
என் குருவே !உனக்கு சமர்ப்பணம் !
என் ஆத்ம சமர்ப்பணம் !
.
.
No comments:
Post a Comment