இன்னொரு பக்கம்
விடிகாலை வாசலில் நின்று பல் துலக்கிக்கொண்டிருந்தேன். எவரும் தெருவில் இல்லை. நான் மட்டுமே தனியாக நின்றுக்கொண்டிருந்தேன். எவரும் இல்லாத அந்தத் தெருவின் தனிமை எனக்குப்பிடித்திருந்தது.பறவைகள் இல்லாத நகரம் நரகமாக! ஏனோ காகங்கள் பறவை இனத்தில் ஒன்று என்பது என் மனதில் பதிய மறுக்கிறது. ஒருவேளை நான் மட்டுமே இருக்கும் தனிமைக்கு காகத்தைக் கூட்டாக ஏற்க்க மனமில்லையோ தெரியவில்லை .காகத்தின் குரல் தனிமைக்கு இடையூராக உணர்ந்தேனோ அதுவும் தெரியவில்லை. என் சிந்தனையெல்லாம் கீழே ஓடிக் கொண்டிருந்த சாக்கடையின் மீது இருந்தது .
அம்மாவின் குரல் என் கவனத்தை மீட்டது .பெரும்பாலும் அம்மாதான் அந்த வீதியில் அதிகாலை வாசல் தெளித்து கோலம் போடுபவளாக இருப்பாள் . "வெந்நீர் ரெடி மனோ பல் தேய்த்தது போதும் போய் குளிப்பா" .அம்மா நிறுத்த மாட்டாள்.ஆனால் ரொம்ப நேரமாக என் பார்வையை ஈர்த்துக்கொண்டிருந்தது எலி ஒன்றின் போராட்டம்." சாக்கடையின் நாற்றம் குடலை பிடுங்குது இங்க என்ன வேடிக்கை மனோ?" தொடரும்

No comments:
Post a Comment