பீட் பேக் !
-------------
பேராசிரியை கமலாவின் முகம் அவர் படித்துக்கொண்டிருந்த பக்கத்தில் நிலை குத்தி நின்றது .அவர் அவசரமாக கையில் இருந்த தாளின் முன் பக்கத்தைத் திருப்பிப்பார்த்தார் .அதில் அந்த கொஸ்டசனர் எந்த பி.எட். கல்லூரியினுடையது என்ற விவரம் தெளிவாக அச்சிடப்பட்டிருந்தது . அவர் படித்த வரிக்கும் அந்த கல்லூரிக்கும் ஏதோ தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் அவர் மனதில் தோன்றியது .அவர் உடனே காலை செய்தித் தாளை எடுத்து அவசரமாக முதல் பக்கத்தைப் பிரித்து தலைப்புச் செய்தியில் கண்களை ஓட்டினார் . கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான கொலை செய்திக்கு கீழே கொலையுண்டவரின் படம் அச்சுறுத்தும் வகையில் அச்சிடப்பட்டிருந்தது .கமலா அவசரமாக தன் மொபைல் போனை எடுத்து கமிஷனருக்கு கால் செய்தார்.
. பி.ஒன் ., போலிஸ் ஸ்டேஷன் .இன்ஸ்பெக்டர் அருண் அந்தக் கொலை நடந்த பி.எட்., கல்லூரியின் விடுதியில் தீவிரமான விசாரணையில் இருந்தார். கொலை நடந்த இரவு கொலையுண்ட ராமுவுடன் யாரும் இல்லை என்றே
எல்லா மாணவர்களும் உறுதியாக சொன்னார்கள் .ராமுவுடன் இருந்த அவன் ரூம் மேட் கோபி ஊருக்குப் போய் இரண்டு நாட்கள் ஆகின்றது என்றும் அவசரமாக போன் வந்து அவன் கோவைக்கு சென்றுவிட்டான் என்றதோடு ஆஸ்டல் வார்டன் அவனுடைய அனுமதி அப்பிளிகேஷனை எடுத்துக் காட்டினார். அது அரை குறை ஆங்கிலத்தில் அவசரமாக கிருக்கப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே கமிஷனரிடமிருந்து கால் வந்தது ." எஸ்.... எஸ்.... சார் இதோ கிளம்பிட்டேன் சார் பைவ் மினிட்ஸ்ல மேடத்திடம் இருப்பேன் சார் " என்று பேசிக்கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்தார் .போகும் பொழுது மறக்காமல் அந்த அறையின் குப்பைக் கூடையில் இருந்த எல்லாவற்றையும் ஒரு கவரில் போட்டு எடுத்துச் சென்றார் .
பேராசிரியர் கமலா இவர் வருகைக்காக பதட்டத்துடன் காத்திருந்தார் .ஒரு சிறிய அறிமுகத்துடன் அவரிடம் இருந்த கொஸ்ட்சனரை வாங்கிகிப்பார்த்தர். கையில் கொண்டு வந்திருந்த கோபியின் அப்ளிகேஷனுடன் ஒப்பிட்டுப் பார்த்தார் " .ம் ..ம்....ம் மேடம் இந்த கொஸ்ட் சனரை நான் எடுத்துட்டு போறேன் எனக்கு தேவையாக இருக்கிறது இப்ப
நான் கொஞ்சம் அவசரமாக கோவை போக வேண்டியிருக்கிறது " என்று சொன்னபடி எழுந்தார் .அவரிடம் ஏதோ கேட்க வந்த கமலாவை" அப்புறம் போன் செய்யிறேன் மேடம் ப்ளீஸ் " என்று கூறி விட்டு அவசரமாக பைக்கை கிளப்பினர் .
கோவையில் கோபியிடம் அருண் கேட்ட கேள்விகள் "எப்போ கோவைக்கு வந்தாய்? " " இரண்டுநாள் ஆச்சு சார் "
"உன் ரூம் மேட் ராமு செத்திட்டான் தெரியுமா?"
"தெரியும் சார் பேப்பரில் பார்த்தேன்"
"எப்படி செத்தான் என்று தெரியுமா?"
"தெரியும் சார் யாரோ கழுத்தை அறுத்து ...ஐயோ பாவம் சார்..... ரொம்ப நல்லவன் சார் "என்று முகத்தில் லேசான துக்கமும், கொஞ்சம் கண்ணீரும் விட்டான்.
"நீ ஏன் அவன் கண்ணீர் அஞ்சலி ஊர்வலத்தில் கலந்துக்க வரல? "என்று மடக்கினார் .
"அது வந்து இங்க என் நிலைமை கொஞ்சம் மோசம் சார். நான் ஊருக்கு வந்ததே அதைத் தீர்க்கத்தான் "
"உன் கூட வீட்டில் யாரும் இல்லையா ?"
"தாத்தா மட்டும்தான் சார் , உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறேன் சார் ".
"சரி கிளம்பு "
"எங்க சார்...........
"ம் ம்ம்......... மாமியார் வீட்டுக்கு " என்று எழுந்தவரை திரு.... திரு... என்று பார்த்து விழித்தான் கோபி.
"சார் நீங்க சொல்றது கொஞ்சம் கூட எனக்கு புரியவில்லை . எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை ......" என்றவனின் கழுத்தில் சடேரென்று விழுந்த அடியில் பொறி கலங்கி நின்றான் .
பேராசிரியர் கமலாவின் வீட்டில் காபி குடித்தபடி நடந்தவைகளை விளக்கிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் அருண்.
மேடம் உங்கள் கொஸ்ட்சனரில் ' யூசஸ் ஆப் ய நைப் ' என்ற கேள்விக்கு பையன் கோபி ' டு கட் த த்ரோட் ஆப் எ டிஸ்டர்பிங் நெய்பர் என்று எழுதி இருந்தானா ? '
" அதான் எனக்கே தெரியுமே சார் .அதனால்தானே நானே கமிஷனருக்கு கால் செய்தேன் . மேலே சொல்லுங்க " என்று அவசரப்படுத்தினார் .
பையன் எல்லாவற்றையும் பக்காவாக ப்ளான் செய்து கொலையை கச்சிதமாக முடித்து விட்டு கிளம்பி விட்டன.
அவன் கோட்டை விட்டது உங்களிடம் . அடுத்து குப்பை கூடையில் இருந்த பஸ் டிக்கெட்டுகள்.
" பஸ் டிக்கெட் ஸ் ...!"
ஆமாம் மேடம் கோபிக்கு ஒரு பழக்கம். பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட் எதுவானாலும் நீள வாக்கில் பல மடிப்புகளாக மடித்து மோதிரத்தில் சொருகி அறைக்கு வந்ததும் மறக்காமல் குப்பை கூடையில் போடுவது . அதுதான்
அவனை முக்கியமாக காட்டிகொடுத்தது .அவன் அறையிலிருந்து எடுத்து வந்த குப்பையில் கோவை டு சேலம் , கோவை டு சேலம் .சேலம் டு கோவை சேலம் டு கோவை என்று தனியார் டீலெக்ஸ் பஸ்களின் டிக்கெட்டுகள்இருந்தன. அவன் ஊருக்கு போவதை மற்றவர் நம்ப வேண்டும் என்று கழுதை காசை செலுவு செய்திருக்கிறது . பத்தாதற்குத் தாத்தாவை வேறு ஐ சி யூவில் சேர்த்து நாடகம் .பாவம் பெரியவர் ஐசியு குளிரில் நடுங்கியவண்ணம்" என்னவோ சார் என் பேரன் திடீர்னு வந்தான். இங்கே ஒரு நாள் படுத்து இரு தாத்தா" என்று நான் சொல்வதை காதில் போடாமல் பணத்தை கட்டி இங்கே படுக்க வைத்து விட்டு போயிட்டான் சார் ....... என்று உளறியது . என்னவோ லவ் மேட்டர் கோபி,ராமு ரெண்டு பெரும் ஒரே பெண்ணை காதலித்து ....வழக்கமாக . இளைஞ்ஞர்கள் தவறும் இடம் .
கமலாவின் பெரு மூச்சும் .... அருணின் பெரு மூச்சும் .........உணர்த்தும் வேதனை இன்றைய தலைமுறைக்குப் புரியுமா " . எனக்கு பீட் பேக் தேவை .
- முற்றும் -

No comments:
Post a Comment