Pages

1.14.2013

innorupakkam! (tamil)

இன்னொரு பக்கம் !

நான்  பார்த்துக்கொண்டிருக்கும்போதே  பக்கத்து வீட்டுக்  கழிவறையிலிருந்து வெளியேற்றப் பட்ட தண்ணீரின் வேகம் சாக்கடையின் வேகத்தை அதிகப்படுத்தியது . சாக்கடையில் முயற்ச்சி செய்து மிதந்துக்கொண்டிருந்த எலியின் நிலை மேலும் போராட்டமாக மாறியது .தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து மிதப்பதே சிரமமாக இருக்கையில் அதி வேக சாக்கடை நீரின் இழுப்புக்கு  எதிராக நீந்தி ஒரே இடத்தில் நிற்க  எலி மிகவும் முயற்ச்சி செய்தது.அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்ததை அலட்சியப்படுத்தி எலிக்கு எந்த வகையிலாவது உதவ முடியுமா என்று பார்த்தேன் .எலியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பது வேறு என்னை அங்கிருந்து நகர விடாமல் செய்தது .மேலே திண்ணையிலிருந்து கீழே  இறங்கி சாக்கடைக்குப் பக்கத்தில் சென்று பார்த்தேன் .அந்த சிறிய எலியின் உடல் மிகவும்  நடுங்கிக் கொண்டிருந்தது .அதன் வெளித்தோல்  சுருங்கி வெளிர்ந்து காணப்பட்டது..அதன் கண்கள் சிவந்திருந்தது . அதைப்பார்த்தால்அதன் ஆயுள் இன்னும் சில நிமிடத்திற்கு மேல் தாங்காது போல  இருந்தது .  பொழுது விடிய ஆரம்பித்தது . சிலரின் நடமாட்டம் தெருவில் ஆரம்பித்தது. பால்காரன், காய்கறி கூடைக்காரியின் கூவல்.,பேப்பர் பையன்களின் சைக்கிள் மணி சத்தம் ......" .மோர் மோர் மோரே .... ".இழுவை ..எதுவும் என்னை அசைக்கவில்லை.அம்மா பொறுமை இழந்து வெளியில் வந்தாள். நான் சாக்கடைப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து  "சாக்கடையில் என்னடா வேடிக்கை ?" என்றாள் .அப்பொழுது எதிர்வீட்டு ஜன்னலில் உட்கார்ந்திருந்த காக்கை " கா கா கா கா கா ......." என்று சத்தமாய் கத்தியது.அம்மாவின் கவனம் அதன் பக்கம் திரும்பியது .நான் சற்றும் யோசிக்காமல் என் இடது கையினால் எலியின் வாலை பிடித்திருந்தேன். சாக்கடை நாற்றம் குடலை பிரட்டியது .என் அவசர முயற்ச்சிக்கு முக்கிய காரணம் சற்று அருகில் சாக்கடையில் மிதந்து செல்லும் மலத்தைத்    தின்ற வண்ணம் வந்துக்கொண்டிருந்த பெரிய பன்னியின்அச்சுறுத்தல். அம்மா என்னடா செய்யிறே என்று பதறிக்கொண்டிருக்கும்போதே  எலியை தூக்கி சாக்கடை விளிம்பில் வைத்தேன். 'அதற்க்கு உயிர் இருக்கிறதா இல்லையா' என்று விசனமுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா" கர்மம் கர்மம் கர்மம்" என்று தலையில் அடித்துக்கொண்டிருந்தாள் .போவோர் வருவோரும் அம்மாவின் கூச்சலுக்கு  செவி சாய்த்து  திரும்பிப்பார்த்தனர் .என் கவனமெல்லாம் எலியின் மீதும் அது அசைகிறதா  என்பதின் மீதும் இருந்தது. காக்கையின் " கா கா கா கா ... ".சத்தம் எரிச்சலை  மூட்டியதைப்  பொருட்படுத்தாமல் எலியை பார்த்துக்கொண்டிருக்கும்போது  அதன் சிறிய அசைவு என்னை அளவில்லாத  மகிழ்ச்சியில்  துள்ளச்செய்தது . நான் நிமிர்ந்து அம்மாவின் முகத்தை வெற்றிப்  பெருமிதத்துடன் பார்க்கும் எண்ணம் என் உள்ளத்தில் தோன்றிய அதே  நொடியில் அம்மா பதற்றத்துடன் கத்தினாள் " மனோ எலிடா ..  காக்காடா  .டேய் மனோ .."என்று முடிக்கும் முன்பாக எலியை அந்தக்  காகம் கவ்விக்கொண்டு  பறந்தது . நான் துவண்டு போனேன் ,சொல்ல முடியாத துக்கம்  என் நெஞ்சைக்  கவ்வியது . 'ஒரு மணி நேரமா மெனக்கெட்டு சாக்கடை  நாற்றத்தில்  நின்றுகொண்டு ......ம்  சே...' என்று மனம் விரக்தியில் சளிக்க ..  நிமர்ந்தவனின்  காதில் விழுந்த அம்மாவின் வார்த்தைகள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல  இருந்தது ."  அது பாட்டுக்கு சாக்கடையில் இருந்திருந்தால் கூட  இன்னும் கொஞ்சம் நேரம் உயிரோட இருந்திருக்கும். அதைப்  பாழா  போன  காக்கைக்கு பிரேக் பாஸ்ட் ஆக்கிட்டாயே  ... "    என்று சொல்ல வந்ததை என் முகத்தின் வலி கண்டு நிறுத்திவிட்டு என்னை வாய்  பிளக்க பார்த்தாள்  . நான்  மௌனமாய் குளிக்கச்சென்றேன் .
                                                                                                                                           
                                                                                                                     _  முற்றும்  _
 

No comments: