சிறகுகளும் சுவடுகளும்
உன் கண்களில் நான் பார்த்த
உலகம் என் மனதில் அதிக
கனவுக் கனலை எரியவிட்டது .
நான் துணிந்து எடுத்து வைத்த
முதல் அடியில் மனித முட்கள் குத்தியது
அலட்சியப்படுத்தி முன்னேறியபோது
பாதையே நெருஞ்சிக் காடக மாறியது!
உன் கண்கள் காட்டிய இந்த
உலகம் மெய்யானது அல்ல வென்று
நான் உணர்ந்தபோது
ஓட்டமுடியாத அளவு உடைந்து போனேன்!
என் நினைவுகள் மரத்துப் போனது!
இதயம் கனத்துப் போனது!
உணர்ச்சிகள் உறைந்து போனது!
ஆனாலும் நெருஞ்சிக்காட் டில் பாதையமைத்த
என் பாதங்கள் தனி முட்களின் கீறலுக்கு
அஞ்சாமல் சிகப்புச்சுவடுகளைப்
பதித்த வண்ணம் பயணம் போகின்றன.
வாழ்க்கை வழி போகும் பாதங்கள்
சுவடுகளாகின்றன .ஏனென்றால்
வாழ்க்கை வானத்தில் இல்லை!
என் பாதங்களுக்கும் சிறகுகளில்லை!
உன் கண்களில் நான் பார்த்த
உலகம் என் மனதில் அதிக
கனவுக் கனலை எரியவிட்டது .
நான் துணிந்து எடுத்து வைத்த
முதல் அடியில் மனித முட்கள் குத்தியது
அலட்சியப்படுத்தி முன்னேறியபோது
பாதையே நெருஞ்சிக் காடக மாறியது!
உன் கண்கள் காட்டிய இந்த
உலகம் மெய்யானது அல்ல வென்று
நான் உணர்ந்தபோது
ஓட்டமுடியாத அளவு உடைந்து போனேன்!
என் நினைவுகள் மரத்துப் போனது!
இதயம் கனத்துப் போனது!
உணர்ச்சிகள் உறைந்து போனது!
ஆனாலும் நெருஞ்சிக்காட் டில் பாதையமைத்த
என் பாதங்கள் தனி முட்களின் கீறலுக்கு
அஞ்சாமல் சிகப்புச்சுவடுகளைப்
பதித்த வண்ணம் பயணம் போகின்றன.
வாழ்க்கை வழி போகும் பாதங்கள்
சுவடுகளாகின்றன .ஏனென்றால்
வாழ்க்கை வானத்தில் இல்லை!
என் பாதங்களுக்கும் சிறகுகளில்லை!
No comments:
Post a Comment