என் பார்வையில் எழுத்தாளனின் கடமை!
தார்மிகமான கோபம் உடலையும் உள்ளத்தையும் தகிக்காத ஜடத்தனத்தை
பழக்க மாக்கிக்கொண்ட ஜனங்களுக்கு அம்மாதிரியான கோபமும்;
மென்மையான உணர்வுகள் அடிவாங்கி நிமிரும்பொழுது வெளிப்படும் சீற்றமும்; நீண்ட புல் முனையில் உரசி உரசி சிறகுகளை பல பலப்பாக்கிக்கொள்ளும் வண்ணத்துப்பூச்சியின் முயற்சியை பார்த்தால் கூட மனதுக்குள் அருவியை கொட்டும் சந்தோஷமும்; இரவு நேரங்களில் வெற்றுடம்பை தழுவியபடி உறங்கும் பிஞ்சிக்கைகளை பார்க்கும்பொழுது விம்மலாய் தெறிக்கும் சோகமும்; இன்னும்....... பலதும் ஒரு நாடகமாடலாய் தெரியும்,பூவாய் சிரித்தால் கூட பொசுக்கென்று ' வேசித்தனமான குலுக்கள் உன்னுதுனு' வர்ணிக்கும் பார்வைகள் பழக்கமாகிவிட்டலும் எழுத்தாளனின் ஈரத்தை அவை குரூரமா னவையாகக் குதறுகிறது. பச்சென்று கண்களில் கட்டிக்கொள்ளும் துளிகள் மனவேதனையை எழுதும் மையாவதையரியாது நீலிக்கண்ணீரின் மாய்மாலங்கள் என்று விமர்சிக்கும் பொழுது துவளும் நெஞ்சில் துடிக்கும் வார்த்தைகளில் சீரும்பொழுது தணிவது எழுத்தாளனின் சினம் அல்ல, சாந்த்தப்படுவது அவன் துக்கம் சமாதானமடைவது விம்மலில் வெடிக்கும் வலி உணர்ந்த அவன் நெஞ்சம் . தொடரும்
No comments:
Post a Comment