காதலில் மயங்கி இருந்த என் எண்ணங்கள்.

அவள் என் வானத்தின் நிலவு.

அவள் என் வீட்டின் விளக்கு.

அவள் என் வாழ்வின் இசை.

அவள் என்னை இயக்கும் விசை.

அவள் என் உறவின் பாலம். அவள் என்னை மயக்கும் கீதம்.

அவள் என் இதயத்தின் துடிப்பு.

அவள் உள்ளத்தின் பிரதி.

அவள் என் ஆத்மாவின் குரல்.

அவள் என் உடலின் உயிர்.

காதலில் தெளிந்து பின் என் எண்ணங்கள்.

அவள் என் வாழ்வின் இருட்டு.

அவள் என் இரவுகளின் பயங்கர கனவு .

அவள் என் பகலின் மூடுபனி.

அவள் என் சிந்தனையின் தொடரும் குழப்பம்.

அவள் என் முயற்சிகளின் முற்றுப்புள்ளி.

அவள் என் பாதங்களில் தைத்த முள்.

அவள் என் உயிரின் வதை.

அவள் கழுத்தை இறுக்கும் கயிர்.

அவள் நான் இறந்த பின்னும் ,என்னை

கொள்ளத்துடித்து நிற்கும் கத்தி.

No comments:
Post a Comment