Pages

4.04.2013

thirudiyathu yaar




                                                       திருடியது யார்?

  திருட்டு என்றவுடன் அதனோடு தொடர்புடைய  எல்லாவற்றையும் நான் யோசித்துக்
  கொண்டிருந்தேன். என் மனதில்" எடுத்துக்கொள்வது, எனது இல்லாததை, வேறு
  ஒருவருடையதை.........." சரி "அது பொருளா? இல்லை கருத்தா?" இப்பொழுது
எங்கும் எப்பொழுதும் நடப்பது இந்த இரண்டு மட்டும்தான் என்று நினைக்கும்
முன் இது இரண்டு மட்டும்தானா? என்ற கேள்வியும் என்னுள் புகை மூ ட்டமாக
  எழுந்தது. ஆம் இல்லை என்று முடிவு செய்யும் முன் திருட்டின் விளைவுகள்
பற்றி சிந்தனை ஓடியது. பொருள் திருட்டு வெளிப்படையானது. இழந்தவருக்கு
மட்டுமே பாதிப்பு. கருத்துத் திருட்டு நுட்பமானது. முன்னதிற்கு
  நிரூபணங்கள் காட்டப்பட்டால் போதும். திருடப்பட்டப்பொருள் கண்டு> பிடிக்கப்பட்டிருந்தால் திரும்ப கிடைத்துவிடும். ஆனால்
  பின்னதிற்கு............. இந்த கருத்து என்னுடையது , என் மூளையில்
  உதித்தது எனவே எனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாது. ஒரு வேளை
  அச்சில் இருந்தால், கட்டுரையாக,கவிதையாக,கதையாக......இன்னும்
  இலக்கியத்தின் ஏதோ ஒரு வடிவாக அச்சில் இருந்தால் இந்த கருத்தை நான் என்
  புத்தகத்தில் இந்த பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன் எனவே இந்த கருத்து
  என்னுடையது என்று உரிமை கோரலாம்.பதிவுகள் என்றான பின் அதில் செல்லுலாய்ட்
பதிவுகளும் அடங்கும்.ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. பதிப்பின்
   என்ற வருடங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும். யாருடையது முன்னுரிமை
  பெருகிறது என நிர்ணயிக்க பதிக்கப்பட்ட வருடம் கணக்கில்
  கொள்ளப்படும்.அதில் பிரச்சனை தீர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. சரி
அச்சில் இல்லாத பதிவுகள்.....மனத்திரையில் .எண்ணக்குவியலில்...சிந்தனை
  கூட்டத்தில்.....எதெல்லாம் தனி மனித கருத்துகளின் துவக்கப்புள்ளி,
  ஆரம்ப இடம் ..origin point என்ற வரையரைக்குள் வரும் எதனோடு தொடர்புடைய
 கருத்தையும் என்னுள் முதலில் முகிழ்ந்தது  என்ற நிரூபிக்க தேவையான
  அளவீட்டுக்க்கருவி  எங்கு கிடைக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.
  அப்படி ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா என்பதும் கேள்விக்குரியே!
  மனிதனின் மூளை மடிப்புகளில் உதயமாகாதது எதுவும் இல்லை என்றால் பின் ஏன்
  எல்லாருடைய மூளையிலும் ஒரே மாதிரியான கருத்துக்கள் முளைக்கக்கூடாது என்ற
  கேள்வி வருகிறது. அதிசயமாக அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் ஆ.....  இது
  என்னுடையது நான்தான் இதன் படைப்பாளி என்ற சொல்லாடலில் ஆரம்பித்து,
  வம்பாடலில் வளர்ந்து கடைசியாக வழக்காடலில் இழுபறியாக தொடர்ந்து,
  ஊடகங்களில் ஊசலாடி...... இது முற்றுப்புள்ளியை அடையும்பொழுது ..... அதை
  தீர்மானிக்கும் யாரோ ஒரு மனிதனின் பதவி நீதிபதி என்ற அந்தஸ்து மட்டுமே
அந்த முடிவை ஏற்கும் பக்குவத்தை!? சந்தேகம்தான்..... எப்படிச் சொல்லலாம்?
  ம்..ம்...ம்ம்ம்ம். நெருக்கடியை  திணிக்கிறது என்று கூட இதைச்சொல்லலாம்.
  அப்படியானால் மனித சிந்தனையில் முகிழும் கருத்துகளின்  chronological age
  or starting time and period என்பதை அல்லது அது முகிழ்ந்த காலத்தை
  தீர்மாணிக்கும் கருவி தீர்ப்பை எழுதியவரின் மூளையில் உள்ளதா? உலகத்
  திரைகளில்,உலக இலக்கிய பதிவுகளில்......... இன்னும் என்னவெல்லாம்
  ஆவணப்படுத்தப்படும் உள்ளீடுகளை உடையதாக உள்ளதோ..... அதையெல்லாம்
  வரிசைப்படுத்தும் சரித்திரதாரியின்  தலையில் எத்தனை மூளைகள்....உடலில்
  எத்தனை தலைகள்.... அந்த அவதாரத்தின் வடிவம்  தோற்றம்... அதன்
  பின்னனி..... ஒரே குழப்பம்..... ஆனாலும் மனம் இந்த திருட்டைப்பற்றியே
  யோசித்துக்கொண்டிருக்கிறது. எண்ணங்கள் பயணிக்கும் வேகத்தின் அலகு என்ன?
  இந்த அலகுக்கும் கருத்து திருட்டை  முடிவு செய்யும் முயற்சிக்கும்
  ஏதேனும் தொடர்பு உள்ளதா? உலகத்தின் மூலை முடுக்குகளில் வானத்தை தொடும்
  கான்க்கிரீட் அடுக்குப்பெட்டி களில் அடைந்து கிடக்கும் மனித
ஜீவராசிகளில்...... இதற்கு விடை சொல்லும் அறிவு ஜீவி யார்? அப்படி ஒரு
 வர்க்கம் உலகப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா? கருத்து திருடர்கள் >
பற்றிய என் சிந்தனை  ஓட்டம்  திடீரென்று கழுத்து திருகப்பட்டது போல நின்று விட்டது . அந்த இடத்தை  இப்பொழுது வயது பேதம் இல்லாமல் எல்லாரையும் ஆட்டிவைக்கும் "  என் மனதை திருடியது  "  என்ற  தொடர் பிடித்துக்கொண்டது . முன்னதற்காவது  ஏதேனும் விடை கிடைக்கும் இந்த மன திருட்டை அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில் கண்ட பிடிப்பது ????????? ???   


No comments: