Pages

4.04.2013


அமுத மொழிகள் பல பேசி என்னை வீழ்த்தினாய்!
--------------------------------------------------------------------------------------

அமுத மொழிகள் பல பேசி என்னை வீழ்த்தினாய்!
விழுந்த இடம் எது என்று உணரும் முன் நான் தேடினேன்!
உன்னை அல்ல என்னை!
இன்னொரு அமுத மொழி கேட்கும்!
ஆனால் நான் இருக்க வேண்டும் அல்லவா அதை கேட்க?
அதனால்தான் தேடினேன் என்னை.
நீ வீழ்த்துவது அல்ல என் பிரச்சனை!
நான் எழுவதுதான் என் பிரச்சனை!
பேசிக்கொண்டிருக்க யாராவது இருந்த வண்ணம் இருப்பார்கள்.
இங்கு கேட்பவர்தான் அறிது. ம்..ம்..கொட்ட ஆள் கிடைத்தால் .......
அமுதமொழிகள் பேசி வீழ்த்த பலர் உண்டு!
எழுபவர்தான் குறைவு இங்கே.
அதனால்தான் எப்பொழுதும் அதி கவனத்துடன் இருப்பது!
இருப்பது மட்டும் போதும்.
இங்கே எவராவது எதையாவது கொஞ்சி கெஞ்சி கேட்க வைப்பார்கள்!
விழவும் எழவும் தெரிந்தால் போதும்.....
வாழ்வில் அமுத மொழிகளுக்கு பஞ்சமே இல்லை!!!!!!!!!!!!

No comments: