அச்சம்
என்பது
மடமையா?
அச்சம் என்பது மடமையா என்று யாராவது
கேட்டால்
இன்று
நம்மிடம்
என்ன
பதில் வரும்? நிச்சயமாக இல்லை என்பதுதான்
நம்
பதிலாக
இருக்கும்.அஞ்சுவது
அஞ்சாமை
பேதமை....அஞ்சுவதற்கு
அஞ்சு,
தேவையில்லாமல்
அஞ்சாதே
என்றெல்லாம்
இன்று
யாருக்கும் சொல்லிவிடமுடியாது. ஊடகங்கள்
வழி
நம்மை
வந்து
சேரும்
செய்திகள்
அச்சுருத்தலை
ஏற்படுத்துகிறது.எதையும்
சந்தேகக்கண்
கொண்டு
பார்க்கும்
எச்சரிக்கை
உணர்வை
நம்முள்
விதைக்கிறது.மனிதன் மனிதனை நேசிக்க
கற்றோமோ
இல்லையோ,
மனிதன்
மனிதனை
சந்தேகிக்க
கற்றுக்கொண்டோம்.
சந்தேகத்தின்
விளைவாக
வெறுப்பு
மனிதர்கள்
மீது
தன்னால்வந்து
விடுகிறது.
எதைப்பார்த்தாலும்
அச்சம்,
எதை
செய்யவும்
அச்சம்
. ஏன்
என்ற
கேள்வி கேட்கவே
நம்மில்
பலருக்கு
மறந்து
விட்டது.
விதிப்பயன்,
தலை
எழுத்து,
என்
கர்மா.......
இன்னும்
இத்தியாதிகளில்
நாம்
சுகமாய்
பயணிக்க
கற்றுக்கொண்டோம்.
அது
சுகமான
ஒன்றுதானா
என்ற
கேள்வியெல்லாம் நம்மில் முளைப்பதுகூட
இல்லை.
ஏன்
என்று
ஆரம்பித்து
தொடரும்.......பிரச்சனைகளில்
மாட்டிக்கொண்டு
முழி
பிதுங்கி,
மூச்சு
விட
திணறி.....காலம்,பணம்,அமைதி......
இதையெல்லாம்
இழந்து
ஏன்....
என்பதற்கு
விடை
கிடைக்கும்
முன்பாக
முக்கால்
உயிர்
இழந்து
நடைபிணமாக
வாழ
யாருக்குத்தான்
ஆசையிருக்கும்.
அதைவிட
ச்சே.....
என்
தப்பு.
நான்
இப்படி மாட்டிக் கொண்டிருக்கக்
கூடாது.
என் முட்டாள்தனம். சுய குற்றச்சாட்டு
இல்லை
பிறர்
குற்றச்சாட்டு...எதாவது ஒன்றில்
தலை கவிழ்தல்
நேர்ந்துவிடுகிறது.
நம்மை
மடக்கப்
பார்க்கும்
எத்தனையோ
சிக்கல்களில்
இருந்து
நம்மை
மீட்டுத்தருவதில்
அச்சம்
என்பது
மடமையில்லை
என்ற
சிந்தனைக்கு
முக்கிய
பங்கிருக்கிறது.
தாயின்
கருவரைகூட
இன்று
அபாயம்
நிரைந்ததாகிவிட்ட
விஞ்ஞான
சூழல்
"தொப்புள்
கொடி"
தேவை
உயிர்
ஜீவன்
ஜன்மமெடுக்கும்
முன் கருவரை கொலைகள்.......மனிதனின்
இருத்தல்
ஆசைக்கு
வடிகாலாய்
அதுவும்
பணம்
படைத்தவருக்கு
மட்டுமே
சாத்தியமான
ஒன்றாய்.......சேமிப்புக்கணக்கில்
மனிதன்
இன்னும்
எதையெல்லாம்
சேமித்து
வைப்பான்
என்ற
மலைப்பு..........
நம்மை
திகைக்க
வைக்கும்
அதே
வேளையில்
நம்முள்
ஒரு வெறுப்பையும் அது உண்டாக்குகிறது. இந்த வெறுப்புதான்
நம்மை
அச்சப்பட
வைக்கிறது.! ஆதலால் அச்சம் என்பது மடமையில்லை என்று கொண்டாடுவோம் .
No comments:
Post a Comment