Pages

5.09.2013

வீராசாமி தோற்றுபோனான் !                                                                                                                                                                                                                                                                    இன்று  +2 தேர்வு முடிவுகள் வந்து விட்டது . முதல் மதிப்பெண் பெற்றவர்கள்
 பாராட்டு மழையில் ... காசு கொழுத்த  கல்வி கூடங்கள் ஈசல் புற்று வாயாய்  மொய்க்கப்படும்  விசித்திரம் . வஞ்சிக்கப்பட்ட  நலிந்த பிரிவின்  ஏக்கப்பெருமூச்சுகள் .பெருகி  வரும் குற்றங்களும் அருகி வரும் நீதிகளும் கல்வி தளங்களிலும் காணக்கிடைக்கும். . பெரும்பணம் கொண்டோர் ஆட்சி செய்யும் கல்வி கூடங்கள். நலிந்த ஏழைகள் எட்டினாலும் கிட்டாத "அறிவுக்கனி" இனி வரும் காலங்களில் எவருக்கு சொந்தம். இவையெல்லாம் கல்வி அரசியலின் கசப்பான பக்கங்கள்.இதில் சாமான்யன் ஓட்டுரிமை இழந்த அவலம் எவர் இட்ட சாபம்.தேர்ச்சிப்பெற்றவர்கள்  போய்   சேர ஒரு இடம் உண்டு .வாழ்வின்   முடிவுகள் நிர்மாணிக்கப்பட்டதா ! இல்லை தீர்மானிக்கப்பட்டதா ! நன்றாய் படிக்கும் மாணவன் ஒருவன் தேர்வில் தோற்றுப்போனான்.அவன் ஆசிரியருக்குத்தெரியும் அவன் விடைத்தாளில் அவன் தேர்ச்சிபெருவதற்கான விடைகள் உண்டு  என்று.திருத்தியவருக்கு கொஞ்சம் பொருமையிருந்திருக்க வேண்டும் அவன் கோழி கிறுக்கல் கையெழுத்தில் சரியான விடைகளை தேடி அடையாளப்படுத்தி மதிப்பெண் வழங்க. மலிவான குற்றம் மாணவர்கள் காப்பி அடிப்பது மட்டுமல்ல !
ஆசிரியர்கள் சரியான விடைக்கு மதிப்பெண்   வழங்காததும்தான்!   அதுவரை வீராச்சாமிகள்  தோற்றுக் கொண்டிருப்பார்கள்!



No comments: