Pages

5.07.2013


 தூங்கலாம் வாங்க 


     மனிதர்கள்  வாழும் பூமி உருண்டை உடைந்து துகள்களாய் மிச்சப்படும்
பொழுது அதை  காண மிஞ்சுமா மனித இனம். மரத்தை வெட்டி மாடி வீடு கட்டுவோர் , காட்டை அழித்து  ஆலைகள்  ஆக்குவோர் ,பூமியை குடைந்து நீர் வளம் உறிஞ்சுவோர் ,ஆற்றுப்படுகையில் மணல் அள்ளி அள்ளி  மண் மேடு விட்டுச்செல்லுவோர் , விலை பூமியில் உர  நஞ்சு கலப்போர் ..... இவைகளை அனுமதித்து தூங்கிக்கிடக்கும் அரசு இயந்திரம் .....இவர்களில்    யாரை  கழுவில் ஏற்ற ? மக்கள் மன்றம் பொங்கி எழுமா? " கொர் ...  " கேட்கிறதா என் குறட்டைச்  சத்தம் ? மாடி வீட்டில் குளிர் சாதன பெட்டி வீசும் குளு குளு  காற்றில் 400 அடியில் பூமியை குடைந்து கிடைத்த நீருக்கு தூய்மை படுத்த இயந்திரம் பொருத்திய சுக போக போதையில் தூங்கிக்கிடக்கும் நான்.... இதை கேட்பதா? மனித இனத்தின் கடைசி புள்ளி யாரோ அவர் பொங்குவார் .நாம் தூங்குவோம்  சுகமான தூக்கம்.