கருணை
விடுதலை...
என் பிணம் விழுந்து கிடக்கிறது.நான் உயிர். என் உடலின் அருகில்
நின்று
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்.என் மகன் என் உடலின் மீது விழுந்து
புரண்டு
அழுகிறான்.
அவனை பிடித்து இழுக்கிறது
யார்...
யார்
அது
?ஓ
! காவல்
துறை
ஊழியர்கள்.
என் மகன் கேவலுடன் அம்மா அம்மா என்று கதறி
துடிப்பது எனக்கு
வேதனையாக இருக்கிறது.சட்டம் தன் கடமையை
செய்ய முயலும் பொழுது யார் அதை தடுக்க
முடியும். நான் கை விடப்பட்ட சிறு குழந்தையின்
தவிப்புடன் என் மகனைப் பார்க்கிறேன். அவன்
முகம் அழுது அழுது சிவந்தும், உப்பித்தும்
போயிருக்கிறது. மூக்கிலும் கண்களிலும் வழியும் நீரை கன்னங்களிலும் உதட்டிலும் வழிய
விட்டவனாய் நிர்கதியாய் நிற்கிறான்.காவலர்களின் கேள்விகள்
அவனை மாறி மாறி துளைப்பது எனக்கு விதிர்ப்பாகவும்,அதே
சமயம் கோபமாகவும் உள்ளது.
என் மகனின் அன்பு என் கண்களையும் கருத்தையும்
வழக்கம் போல மறைக்கிறது.எத்தனை
எத்தனை அன்பு வார்த்தைகள்; எத்தனை எத்தனை
நெகிழும் காதல் நொடிகள்;
கோடான கோடி அதிகார ஆளூமைகள். இம்மி முக
மாற்றமும் 'வெர்னியர் காலிப்பஸ்'
துள்ளியத்துடன் அளவிட்டு ஏன் எதனால் என்று
துளைக்கும் கேள்விகள்?
அன்பு வதையாவது ஆத்திரத்தை ஊட்டும் நரக
சித்திரவதைகள்! வேண்டிய
மட்டும் சிலிர்ப்பும் திக்கு முக்காட வைக்கும்
தித்திப்பும்
மிகுந்த பல்லாயிரம் கதைகள் உண்டு என் மகனுடனான
பாச பிணைப்பில். அது
பிணைப்புதான்.தப்பிக்க முடியாத கைதியின்
இயலாமை நிறைந்த ஏக்க
பெருமூச்சிகளை உதிர்க்கச்செய்யும் தனிமையின்
சோக அவலங்கள். உயிர்
ஏங்கி ஏங்கி தேடிக்கொண்ட விடுதலை இன்று
ஏன் வலிக்கிறது?. ஐயோ என் மகன் தனிமையில்
இனி என்னாவான்? அவனுக்கு யார் இருக்கிறார்கள்
துணையாய் ஆறுதல் சொல்ல.நான் அவனை
அழைக்கிறேன் செல்லம்... புஜ்ஜி.... அவனுக்கு
கேட்கவில்லையே! போலீஸ் அவனை
என்னிடமிருந்து தனிமை படுத்தி பக்கத்து
அறைக்கு....ஐயோ வேண்டாமே அங்கே
போகாதீர்கள் என்று நான் கூச்சலிட்டு சொல்வது
அவர்கள் காதுகளில் விழவே இல்லையே!
என் மகன் மடையன். உண்மை விளம்பி.அவன் தான்
அவர்களை அங்கே அழைத்துச்செல்கிறான்.
என் கண்மணிக்குப் பொய் சொல்லத் தெரியாது.அவன்
சொன்ன பல உண்மைகள் என் கண்டத்தில்
கசந்து வழிந்தது உண்டு. "உன் கிட்ட
இல்லாம யார் கிட்ட நான் இதை சொல்வது அம்மா"
என்று என் கன்னம் கிள்ளி செல்லமாய் தலை
சாய்த்து அவன் கேட்கும் அழகில் சொக்கிப்போய்
அவன் கூறிய பல பல உண்மைக் கதைகளை ம்..ம்..கொட்டி
கேட்டது உண்டு. கொள்ளை
கொள்ளையாக சுமந்தவன். அவை நிறைவேறும்
நிமிடங்களை நான் பக்கத்தில்
இருந்து பார்த்து ரஸிக்க வேண்டும் என்று
ஆசை ஆசையாசையாய் விழைந்தவன்.மிகையான
அன்பும் மிகையான கோபமும் அவனின் அடயாளங்கள்.
முட்டாள்தனத்தின் முரட்டு
பலசாலியும் கூட. அதை யாரும் சொன்னால் ஏற்க
மாட்டான்.ஆத்மாவை சிறையில் சிக்க
வைக்கும் அன்பின் வலி உணராதவன்.வேண்டும்
வேண்டும் எனக்கே எனக்காக மட்டும் நீ என்று இறுக்கிக்கொண்டவனின் அன்பு அனு அனுவாய் என்னை
வெட்டி வெய்யிலில் போட்ட
துடிப்பை ஏற்படுத்திய கொடூரமான தருணங்களை
நான் பல முறை தாண்டி வந்திருக்கிறேன்.
பாவி இன்றும் அப்படி இருந்திருக்கக் கூடாதா?
என் உயிர் பதறுகிறது.என் மகனை
என்னிடம் விடுங்கள். அவன் சொல்வதை நம்பாதீர்கள்.
அவன் பொய் சொல்கிறான்.
நான் கத்துவது யார் காதிலும் விழ வில்லையே!
நான் எப்படி என் மகனுக்குப் புரிய வைப்பேன்!
அவனை பாசத்தில் ,அன்பின் மீதூறளில் நான்
செல்லமாய் அழைக்கும் " கள்ளத்திருடா "
என்று முனகளாய் கிசு கிசுக்கிறேன்.காவளர்களுக்கு
கேட்டு விடக்கூடாதாம். எச்சரிக்கை.
என் கண்மணி என் பக்கம் திரும்புகிறான்.
இதோ என்னைப் பார்க்கிறான்.நான் சைகை
செய்கிறேன். அவர்களை அங்கே அந்த அறைக்கு
கூட்டிட்டு போகாதேடா செல்லம் என்று.
அவனுக்கு புரிந்தது என்று நினைக்கிறேன்.
அவன் தயங்குகிறான். காவளர்கள்
அவனை உந்தி தள்ளுகிறார்கள். "ம்...
ம்..ம்ம்..நட" என் செல்லக்கிளி என்னை திரும்பிப்
பார்க்கிறான்.அவன் கண்களில் உயிரின் வலி
வழிகிறது. நான் என் கைகளை நீட்டி அதை
ஏந்திக்கொள்ளத் துடிக்கிறேன்.என் கைகள்
வீழ்ந்து கிடக்கிறது. அவைகள் அசைய மறுக்கிறது.
அவனின் பல சின்னச் சின்ன தவறுகளை தண்டிக்க
அவை எப்பொழுதும் அசைந்தது இல்லை.
இபொழுது மட்டும் எங்கிருந்து அசையும்." அம்மா kFC cooling beer ம் அதை ஊத்திக்கொடுக்க
ஆசை மனைவியும் இருந்தா எப்படி இருக்கும்? Just imagine மா
" என்று கண்கள் மின்ன அவன்
கேட்கும் விதத்தில் எனக்குள் பொங்கும்
அத்தனை கோபக்கனலும் புஸ்ஸென்று அடங்கிப்
போகும். நான் என் கணவரின் மறைவுக்குப்பின்
சமுதாயத்தில் பட்ட அவமானங்களை நினத்து
வருந்தும் சமயங்களில் " அம்மா கல்யாணமே வேண்டாம்மா
இப்படியே குடியும் அப்படியே.....கூத்...
'...னு.... ஜாலியா இருந்தா......"
என்னை சிரிக்க வைக்கும் முயற்சியாக எதையாவது
அபத்தமாய்
பேசி செல்ல குட்டுகளை என் சார்பா அவனே
வைத்துக் கொள்வான்.என்னை முகம் சுளிக்க வைக்கும்
அவனின் பல உளறள்களை அவனே தண்டித்துக்கொண்டது
இப்படித்தான். இன்று நான் பிணமாய்
இரத்த வெள்ளத்தில் விழுந்திருப்பது அவன்
தவறு என்ற முடிவுக்கு என் குஞ்சுப்பையன்
மூக்கை உறிஞ்சி அவனை நிதானப்படுத்திக்கொள்ளும்
விதத்திலேயே வந்துவிட்டான்
என்பதை நான் ஊகித்து விட்டேன்.அவன் தன்னைத்தானே
வழக்கம் போல தண்டித்துக்
கொள்ளப் போகிறான். அவனுக்குத்தெரியவில்லை.
இது செல்லக்குட்டினால்
மன்னிக்கப்படக்கூடிய சிறு பிழை இல்லை என்று.
என் உயிர் பதற்றத்துடன்
ஊளையிடுகிறது.ஆந்தைகள் அலறும் ஓசை போல்
அது எனக்கு மட்டும் கேட்கிறது.
நான் வேகமாய் என் உடலின் அருகிலிருந்து
விலகி என் மகனை அடைகிறேன்.அவனின்
முகத்தை என் இரு கைகளாலும் ஏந்திக்கொண்டு
இல்லை அப்படி நினைத்துக்கொண்டு
அவன் விழி நீரை என் கரங்களால் துடைத்து
விடுகிறேன். " அம்மா எனக்குத் தெரியும்
நீ என் கிட்டே பேசுவேன்னு.என்னை மட்டும்
உன்னால் உன் மௌனத்தால்
தண்டிக்கவே முடியாதுன்னு.... இப்போ பார்த்தியா
நீ என் கிட்டே வந்துட்டே அம்மா..
அம்மா...எனக்குத்தெரியும்மா.... எனக்குத்தெரியும்மா...
You Love Me So Much ma.. அம்மா
என்னை விட்டுட்டு போக மாட்டேதான்மா......
...... அவன் பேசிக்கொண்டே போகிறான்.
காவலர்கள் அவனை கைது செய்து அழைத்துப்
போகிறார்கள். என் மகன் என்னை
கொலை செய்துவிட்டானாம்.என் பிணம் கேட்பார்
இல்லாமல் விழுந்து கிடக்கிறது.
அன்பின் மீதூறளில் அவன் தந்த கருணை விடுதலை
கொலையாம். யாருக்குப்புரியும்
அவன் தன் அன்புச்சிறையிலிருந்து நான் என் நோய் வதையில் யாசித்த
விடுதலையை எனக்கு அளித்து விட்டு கொலையாளி
என்ற பட்டம் சுமந்து போகிறான்.
எனக்கு நோயின் அழுகல் தந்த வலியை காட்டிலும்
இது அதிக வலியை தருகிறது. நான் உயிர்.
என் மகனுடன் அவனின் அன்புச்சிறையில் அவன்
இனி வாழ் நாள் முழுவதும் வசிக்கப்போகும்
சிறைக்குப்போகிறேன்.என் உயிர் சிறை புகுந்தது!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment