நான்........... நான்.......
அழுத்தம்
அச்சம்
பசி
பண்பு
ஏக்கம்
எல்லாவற்றுக்கும்
முடிவில்லா
போராட்டம்
முயன்று
முயன்று
தோற்றல்
இடைவிடாதா
முயற்சி
எட்ட முடியாத
வெற்றி
ஏக்க பெரு மூச்சிகள்
சுற்றி புகை மூட்டமாய்
நெருப்பின்
அனலாய்
எது பிடிபடாமல்
கை
நழுவி
காற்றாய்
மறைகிறது
மின்னல் கீற்றாய்
நெளிந்து மறையும் அது
வேண்டும் வேண்டும்
அலையும் மனம்
பதறும் உடல்
பீறிட்டு கதறும் ஆத்மா
அலறி துடிக்கும்
எவரும் கவனிக்காமல்
நிர்கதியாய்
நான்
குனிந்து தேடுகிறேன்
நான் தொலைத்தவைகளை
எட்டி நின்று சிரிக்கிறது
என்னை ஏமாற்றி சென்ற
எல்லாம்
அருகில் அருகில்
எதுவும் இல்லை
எவரும் இல்லை
நான் மட்டும்
தனியளாய் தவித்து தவித்து
மீள்கிறேன்
மீட்சி
உடல் மனம் ஆன்மா
ஒருங்கிணைந்த
நான்
எழுந்து நிற்கிறேன்
வானத்தின் கூரை
உச்சியை தழுவி
என்னை ஒன்றுமில்லாமல்
நான்............நான்.......
No comments:
Post a Comment