Pages

9.02.2013

TEACHERS DAY AND ITS PROBLEMS IN THE INDIAN SCENARIO

டாக்டர் இராதாகிருஷ்ணன்
அவர்களின் பிறந்த நாள்
நாடு முழுவதும் ஆசிரியர் தின நாள்
தன்  பிறந்த நாளை ஆசிரியனுக்கு
தாரை வார்த்த நல்லோன் வாழ்க!
அவன் அவதரித்த நன் நாள்
ஒரு பொன்  நாள்
அன்பின் இராதாகிருஷ்ணன்
ஆசிரிய சமுதாயத்திற்கு
அர்பணித்த  தன் பிறந்த நாள்
கற்பிக்கவும் ,கற்கவும், கற்றளை
எளிமையாக்கவும் ஆற்றல் பெற்றோர்
அடையாளம் காணப்பட்டு
நல்லாசிரியன் என அங்கீகரிக்கப்படும்
இத் திரு நாளில் எம் குறை தீர்க்கும்
நாளாக ஏற்கப்படுமா ஐயா மூத்தோனே!
உன் பிள்ளை சமூகம்
பிளவுபட்ட அனுவின் வீர்யம் மிகுதல் வேண்டும்.
ஆனால் அது வீர்யம் குன்றி
எதிர் மறை வேதம் படித்து
எதிர் மறை விவாதம் செய்து வீணில்
செத்து மடியும் கூட்டமாய் தெருவோரம்
தேனீர் விடுதிகளில் தேக்கப்பட்டுப் போய்
தேரும் வழி அறியாது திகைக்கும் கூட்டமாய்
மருண்டு நிற்கையில், அவர் தம் கை பற்றி வழி
நடத்த மீண்டும் ஒரு மூத்தோனாய் நீவீர்
யார் வழி தோற்றம் கொண்டு வருவீர்?
பலர், பலர்  உன் தோற்றம் கொண்டோர்
இங்கு உண்டு அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டாலும்
ஆளும் வர்கத்தின் துண்டுச்சீட்டு
இருந்தால் மட்டுமே நல்லாசிர்யர் என
அங்கீகாரம் பெருவராம். ஏன் இந்த அவலம்
மாவட்டம்  தோரும் நால்வருக்கு மட்டும் சிறப்பாம்
உன் பிறந்த நாளை ஆசிரிய சமூகம் அணைத்துக்கும் தானே
தாரை வார்த்தாய். அணைவருக்கும் வேண்டாம். நல்லாசிரியன்
என அடையாளப்படுத்தப்படும் சிலருக்கு மட்டுமாவது
நல்லாசிரிய விருதினை உனக்கு அளிக்கும் பிச்சையாகவாவது
போடுமா இந்த அரசு? அது என்ன கல்வி மாவட்டத்தில் இருவருக்கு
மட்டும் நல்லாசிரியன் விருது என்ற வரையரை?
இருவர் மட்டும் உன் வழி வந்தால்
வாழுமா மாணவ சமுதாயம்?
இயங்குவதும் இயக்குவதும்
நீ எனில் நெறியாளனே அரும் பெரும் சாதனைகளின்
அடையாளமானவனே உன் அடி தொட்டு கேட்கிறோம்
மாவட்ட நிர்வாகத்தால் சுட்டப்படும் அணைவரையும்
அனைந்து கொள்ளும் அரசை எமக்கு பிச்சையிடு
பெருந்தகையே! ஆசிரிய கூட்டத்தின் அருந்தகப்பனே
நல்லாசிரியர்கள் பல்கிப் பெருக வேண்டும்
நாளைய இந்தியா வலிமை கொண்ட மாணவர் கைகளில்
தோள் உயர்த்தி நிற்க வேண்டும் என்ற உன் கனவு
நிறைவேற இந்த எம் வேண்டு கோளை மட்டுமாவது செவி
சாய்க்கும் நல்லரசை எமக்கு பிச்சையிடு.




No comments: