“ பாம்பின்
கால் பாம்பரிந்ததோ "
"பெண்ணின்
நெருக்கத்தில் காமத்தின்
கொந்தளிப்பு ஆணுக்குமட்டுமான
சாபமா . அவளின்
நைந்த சிரிப்பு அது இல்லை
என்று சொன்னதை நிச்சயமாக
உணர்ந்தேன். . “
ஜோவென்று
பெய்த மழையில் அவள் பேசுவது
கேட்கவில்லை. என்
காதுகளுக்கு கூர்மை குறைவு
அதனால்தான் என்று நான் சமாதானம்
செய்துக்கொண்டாலும் அவளின்
ஈரமான உடலை மொய்க்கும்
கண்களுக்கு அபார கூர்மை.
முத்துத்துளிகளாய்
மொட்டு கட்டியிருந்த அவைகளில்
தெரித்த அவளது மெல்லிய தோலின்
கண்ணாடி பல பலப்பு என்னை
நெட்டுயிர்க்கச்செய்தது.
எவனுக்கு வாய்க்க
கிடைத்ததோ இந்த பளிங்குச்சிலை.
அவள் விடாமல் எதையோ
சொல்லிக்கொண்டு வந்தாள்.
அந்த பேருந்தின்
நெரிசலில் நான் ஒதுங்கி
அவளுக்கு இடம் கொடுத்ததற்கு
நன்றி பாராட்டுவதாகத்தான்
என்று அவள் பேச்சை நான்
எடுத்துக்கொண்டேன். அவளின்
உடைகளில் இருந்த ஈரம் பட்டு
அந்த இரண்டு பேர் அமரும் சீட்
நனைந்து நீர் வழிய ஆரம்பித்தது.
எனக்கென்னவோ அவளிடமிருந்து
காற்று குளிர்ந்து வருவதாகப்பட்டது.
இது அசௌகரியமாக படாத
அருமை எப்படி நேர்ந்தது.
எனக்கு குளிரும்
மழையும் அலர்ஜி. ஆனால்
இந்தப்பெண்ணும் மழை நனைத்த
அவளின் குளிர் உடலும் ஜிவ்வுன்னு
ஒரு சூட்டை கிளப்பியது உலகத்தின்
எட்டாம் அதிசயம். மனைவி
விளையாட்டாக குளித்த தலை
முடியை என் முன்னால் கவிழ்த்து
நிமிர்த்தால் அதிலிருந்து
தெரிக்கும் பூந்தூறளான
நீர்த்திவளைகள் எனக்கு கடும்
குளிராய் இருப்பதாக
அவளைத்தள்ளிப்போகச்சொல்லி
சலித்துக்கொள்ளும் எனக்கு
இந்த சூடு ஒரு பரவசமாய்
இருந்தது. மாற்றான்
தோட்டத்து மல்லிகைக்கு தனி
மணம், குணம்,
காரம் போல. .
நான் அவள் பேசுவது
எதையும் காதில் வாங்காமல்
மையமான ஒரு சிரிப்பை முகத்தில்
ஒட்டியபடி பயணித்தேன்.
என் மனம் கண்ட படிக்கு
அவளை இரசிக்க ஆரம்பித்ததின்
அடையாளமாய் என் தொடைகள்
இருகியது. எனக்கு
இந்த அவஸ்த்தை இன்பமாக இருப்பதை
அவள் அறிந்து விடுவாளா என்ற
சந்தேகம் அடிக்கடி எழுத்தது.
நான் அவள் முகத்தை
உற்றுப்பார்த்து
நிச்சயப்படுத்திக்கொண்டேன்.
அப்படி எந்த விபரீதமும்
அவள் உணர்ந்ததாகத்தெரியவில்லை.
அவளின் இயல்பு மாறா
அந்த பேச்சு பயணம் முழுவதும்
தொடர்ந்தது ஒரு சௌகர்யமாக
இருந்தது.
அவள்
முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த
முடி இழைகளை மெல்ல ஒதுக்க
முயற்சித்த தோற்ற அவளின்
தோல்விகள் எனக்கு பெரிய
பரிதாபத்தை கொடுத்தது.
அவளுக்கு உதவ எத்தனித்த
என் விரல்களை அடக்க பெரிய
பிராயத்தனங்கள் செய்ய
வேண்டியிருந்தது. அவள்
அடிக்கடி என்னைத்திரும்பிப்பார்த்து
அவள் பேசுவதை நான் கேட்கிறேனா
என்பதை நிச்சயபடுத்திக்கொள்வதுப்போல
இருந்தது. நான்
அவள் அறியா வண்ணம் ஓரக்கண்ணால்
சேலை விலகியிருந்த அவளது
இடுப்பின் வெளிர் சிவப்பில்
என்னை இழக்க ஆரம்பித்திருந்தேன்.
என் கண்கள் காமத்தின்பால்
வசப்பட்ட மயக்கத்தில் லேசாக
மூடி மூடித்திறந்தது.
பேருந்துப்பயணத்தில்
கிளரும் காமம் தனிக்க எங்காவது
வகுப்புகள் எடுக்கப்படுகிறதா
என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல்
யோசிக்க ஆரம்பித்தேன்.
ஈரச்சேலை இருக்கிப்பிடித்திருந்த
அவளது துடைகளின் வனப்பும்
அவை அவள் கால்களின் உள் சொருகி
நினைவுப்படுத்திய அவளது
அந்தரங்க உருப்பின் பரிணாமம்
என் மனதில் விரியும் அபாயத்தை
கட்டுப்படுத்த நான் சட்டென்று
நகர்ந்து அவளைத்திரும்பிப்பார்த்தேன்.
அவளும் என்னைத்திரும்பிப்பார்த்து
சிரித்தாள். “ பாம்பின்
கால் பாம்பரிந்ததோ "
பெண்ணின் நெருக்கத்தில்
காமத்தின் கொந்தளிப்பு
ஆணுக்கு மட்டுமான சாபமா .
அவளின் நைந்த
சிரிப்பு அது இல்லை என்று
சொன்னதை நிச்சயமாக உணர்ந்தேன்.
. இப்பொழுது மழை
வலுத்துப்பெய்தது. சத்தம்
இரைச்சலாய் காதுகளை அடைத்தது.
ஆனாலும் அவளின்
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
துள்ளியமாய் என் காதுகளில்
விழுந்தது. நான்
அதை உற்சாகத்துடன் கேட்க
ஆரம்பித்தேன். என்
மனதில் புயல் ஓய்ந்தது.
No comments:
Post a Comment