நேற்றய பொழுது உன்னோடு !
நேற்று காலை என் ஸிநேகிதி மனோவுக்கு கால் செய்தேன். அவரிடமிருந்த ஒரே துள்ளலுடன் எதிர் வினை. கங்கை நதியில் படகில் சவாரி செய்ய உட்கார்ந்தவுடன் அவர் என்னை நினைத்திருக்கார். நான் உடன் இருந்தால் எவ்வளவு உற்சாகமாய் இருக்கும் என்று. அந்த சமயம் நான் கூப்பிடவும் அவர் பழைய பாணியில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ்னு கலந்து கட்டி அடிக்க கூட இருந்தவர்கள் பே பே......... எனக்கு அவரின் உற்சாகம் அப்படியே தொத்திக்கிச்சு. நேற்று முழுசும் அப்படி அட்டிட்டு ஐயோ சான்ஸே இல்லனு தலைய ஆட்டி ஆட்டி...... இரசிச்சிட்டு இருந்தேன். என் சார்பா ஒரு கை தண்ணிய தலையில் போட்டுக்கச்சொன்னேன் உடனே செஞ்சாங்க என்பதை பார்த்து பார்த்துன்னு பக்கத்திலிருந்தவங்க கொடுத்த எச்சரிக்கையில் அறிந்த்துக்கொண்டேன். நல்லவற்றையும், இனிமையானதையும் அனுபவிக்க வாய்க்கும்பொழுதெல்லாம் எங்கள் இருவருக்கும் இப்படி நேர்வது உண்டு. ஆத்மார்ந்தமான நட்பின் இருக்கம் பெரிய சுகம். அது ஒரு லயம். அப்படியே ஒன்றிப்போவது. அதற்குப்பின் நாங்கள் இருவருமாய் சேலத்தில் சுற்றிய சுற்றல்களை நினைவு கூர்ந்ததில் நேற்று போனதே தெரியவில்லை

No comments:
Post a Comment