Pages

12.13.2014

காடு திறந்தே கிடக்கிறது!

காடு படம் பார்த்து விட்டுத்திரும்பினேன். சமுத்திரகனி லட்டு சாப்பிடும்பொழுது சாக்கரட்டீஸ் Hemlock அருந்தியது நினைவுக்கு வந்தது. காலம் காலமாய் அறிவை முன்னெடுத்துச்செல்லும் ஒருவனுக்கு இந்தச்சமுதாயம் காட்டும் உயர்ந்தப்பட்ச கருணை இது போல உள்ளது. காட்டின் நலம்  காக்க காட்டில் வாழ்வோர் அதிகாரிகள் ஆக்கப்பட வேண்டும் என்ற அரசியலை முன் வைக்கிறது படம். 1980 களில் தருமபுரி மாவட்டமும் கிருட்டினகிரியும் இணைந்த்திருந்த சமயம் இங்க பணியாற்றும் ஆங்கில ஆசிரியர்கள் யாரும் நிலைத்து வேலை செய்வதில்லை என்பதை முன் நிலைப்படுத்தி இந்த மாவட்டத்தைச்சார்ந்த ஆங்கில இலக்கியம் படித்த முதுகலைப்பட்டதாரிகளுக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கியது. இதுவும் நியாயமான கோரிக்கைத்தான் அரசு கவனிக்க வேண்டும். காட்டை நேசிக்கும் காட்டை வாழ்வாதாரமாக கொண்ட மனிதர்கள் காட்டைப்பாதுகாக்கும் பணியில் அமர்த்தப்பட்டால் நலம் விளையும் என்பது முன்மொழியப்பட்ட கருத்து. நடந்தால் சரி.
Show less


No comments: