Pages

12.13.2014

        மனம் என்னும் …...... இன்னா வேனா வச்சுக்குங்க..

     மனம் மட்டும் இல்லையென்றால் என்று சிந்திக்கும் பொழுதெல்லாம் என்ன புடுங்கிடுவியாம்னு ஒரு நறுக்ஸ் கேள்வி வரும் மனதிடமிருந்து. எட்டிப்போக முடியவில்லை. உன்னை தள்ளி வைக்கலாம்னு பார்க்கிறேன் என்று ஒரு உடன் படிக்கைக்கு வர ஆயத்தம் ஆகும் முன்பே அந்த தில்லாலங்கடிதனத்திற்கு வேற யாரையாவது கூட்டு வச்சுக்கோ நைனான்னு அம்பேல் ஆகும். பிடுங்கி பிடுங்கி போட்டாலும் முளைத்து வர அத்தனை எண்ணக்கூட்டத்தை எங்கிருந்துதான்  தோண்டி எடுக்குமோ இந்த பாழாய்ப்போன மனம். அந்த மனச மட்டும் பிறழ விட்டம்னா  மன நோயாளி பட்டம்  இலவச இணைப்பா வீடு தேடி வரும். அதுக்கு பதில் சொல்லி புரிய வைக்கலாம்னு கிளம்பினா அக்கம் பக்கம் வேண்டாம் உடன் கட்டிலில் புரண்ட மனைவியே நம்ப மாட்டாள். என்னத்த சொல்ல. சரி அது உன்னிய என்னத்தான்பா செய்யுதுன்னு யாராவது கேட்டா பதில் சொல்லத்தெரியாது. அதான் டாபாய்க்கிறதுன்னு உடன் கோலி ஆடினா பிள்ளக்காப்பசங்க அலும்பு வேற தாங்க முடியாது.  மனச எத்தையாவது சொல்லி அடக்கி வைக்கலாம்னு பேச ஆரம்பிச்சா அது ஓயவே ஓயாது. அதும்பாட்டுக்கு ஒன்னுக்கு ஒன்னு தொடர்பில்லாத எத்தையாவது பிராய்ஞ்சிக்கினே இருக்கும். சரி அத்த கண்கானிக்கலாம்னு அல்லாரும் சொல்றாங்களேன்னு ஆரம்பிச்சா சட்டிப்பால நக்கிக்குடித்த பூனை ஒன்னும் தெரியாத மாதிரி தூங்குமே அப்படி கப்புனு ஆயிடும். அப்பாடா ஓஞ்சதுன்னு நிம்மதியா பெருமூச்சு விட்டா என்னையா கூப்பிட்டன்னு வந்து நிற்கும். அப்பால போன்னு ச்சூ போட்டா விடாம கத்தும். அதுங்கூடவே பொறந்ததிலிருந்து குடித்தனம் நடத்தற நாம பொண்டாட்டிக்கூட குடித்தனம் பண்ண முடியாதுங்கிறதும் குடிகாரங்கிட்ட குடித்தனம் செய்ய முடியாதுன்னு பொம்மணாட்டிங்க சண்டி பண்றதும் ஒன்னுதாங்கிறேன். இன்னா சொல்றீங்க.
Show less

No comments: