தெருக்கடை வன்முறைகள் !
எல்லா ஊர்களிலும் தொடரும் அராஜகம் இந்த தெருக்கடைகள். ஒரு பெரு நகராகட்டும் சிறு கிராமம் ஆகட்டும் இந்த தெருக்கடைகளின் மையம் நெரிசல் மிகுந்த கடைவீதி, பேருந்து நிலையம் அருகில்............ அதிலும் முக்கியமாக சிறு வியாபரிகளுக்கு என்று ஒரு தனியான வியாபர மையம் இல்லாத ஊர்களில் இந்த வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவது பாத சாரிகள் மீதுதான். நடைப்பாதை முழுவது ஆக்கிரமித்திருக்கும் கூடகளை, கட்டில்களை, தள்ளு வண்டிகளை, மிதி வண்டிகளை ….......... கடந்து போவது என்பது பெரிய அவஸ்த்தையாக இருக்கும். அதிலும் விழாக்காலங்களை சொல்லவே வேண்டாம். இது ஒரு ரகம்.
இந்த வன்முறைகளுக்கு இன்னொரு முகம் உண்டு. விளைந்ததை சந்தைப்படுத்த நினைக்கும் விவசாயி முதல் தயாரிப்புகளை விற்க வரும் சிறு தொழில் முனைவோர் வரை விதி மீறல்களை அனுசரித்துப்போகும் அதிகாரிகளுடன் கை கோர்ப்பது. இந்த கைகோர்த்தலுக்கு அடிப்பணிய மறுக்கும் அல்ல இயலாத நளிந்தோர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு அளவேயில்லை. இன்று பாலக்கோடு பேருந்து நிலையத்துக்கு அருகில் ஒரு வயதான ஏழை விவசாயி கடை வைத்திருந்த இடத்திலிருந்து அவனை அப்புறப்படுத்த காவல்துறை செய்த அட்டூழியங்களை விவரித்து வருந்திய என் மகன் சொல்வதை கேட்டு நானும் வருந்தினேன். அப்பொழுது என் கணவர் " நெல்லையில் குண்டு வெடித்தவனை விட்டுட்டு கொத்தமல்லி விற்பவனை கொத்தாய் தூக்குறாங்க " என்று முனகினார். அதிலிருக்கும் உண்மை இந்த அதிகாரிகளுக்கு புரியுமா. இந்த இரண்டாவது இரக வன்முறையில் ஒரு நாட்டின் பொருளாதார நசிவும் ஏழைகளின் கண்ணீரும் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இந்த அதிகாரிகளும் அரசும் பெரிய நகரங்களில் உள்ள கடைகளின் முன் பெரிய நெரிசலை ஏற்படுத்தும் கார்களையும் மற்ற வாகனங்களையும் கொத்தாய் அள்ளி எடுத்த நிகழ்வுகள் கரை படியாத கரங்களைக்கொண்ட அரசு அதிகாரிகளின் சரித்திர நிகழ்வுகளாக சொல்லப்படுவது உண்டு. அப்படிப்பட்ட அதிகார்கள் அரசு இயந்திரத்தை ஆட்சி செய்வது எப்பொழுது நம் ஏழை விவசாயிகளும் ,குயவர்களும் வாழ்வது எப்பொழுது!

No comments:
Post a Comment