Pages

6.05.2017

WHAT IS EXPECTED OF TEACHERS,HEADMASTERS, ADMINISTRATIVE OFFICERS AND THE EDUCATION MINISTRY

என்னுரை உன் பயிற்சி குறித்து
----------------------------------------------------
அக்கினிகுஞ்சு  நீவீர்
உமது தழல் வீரத்தில்
குறையில்லை குழந்தாய்
மூப்பின் அனுபவ குறை
உண்டு உண்டு உன்னிடம்

"உலகத்தோடு ஒட்ட ஒழுகுபவர்
நல்லவர் உலகை எதிர்த்து போராடி
நல்லவைகளை ஸ்தாபிப்பவர்கள்
சாதனையாளர்கள்"  அப்துல் கலாம் மொழி
இந்தியா 2020

"உலகத்தோடு ஒட்ட ஒழுகி நல்லவைகளை
ஸ்தாபிப்பவர்கள் மனிதர்கள்" கனி மொழி
கனியமுதுவின் மொழி

பன் முகப்பற்சி ஒரு அளவீடு
உன் முகம் பன் முகமாக மாற
உன் முன் இருக்கும் முகங்களில் உன் முக
தனித்தன்மையை தொலைத்தால் அது
பன் முக வள்ர்ச்சி

யாதுமாகி நிற்கக் கடவது நின் கடமை.

You be what you are when you are alone
But you become what others expect from you
You should not have any personal identity
You can have Personality traits to embrace
The ENTIRE TEACHING FRATERNITY CHILD.

NOW THE SAYINGS OF GREAT EDUCATIONIST
BOTH KNOWN AND UNKNOW TO YOU
BUT KNOWN TO ME BECAUSE OF THE
GREAT SUSPENSIONS ISSUED FORTH
BY THE MISFIT EDUCATION DEPARTMENT
CURRUPT OFFICERS AND NOT BY THE
GOVERNMENT.

FIRST JITTU KRISHNAMOORTHY

"அடுத்த தலைமுறைக்கென்று
மரம் ஒன்று நடாதவன் புத்தகம்
எங்கே எழுதப்போகிறான்?"

நீவீர் முடிந்தால் புத்தகங்களை
படியுங்கள். புத்தகங்களை எழுதுங்கள்.

அடுத்து புத்தகம் ஆக்கியோன்
மனித வள மேம்பாடு
அடைய புத்தகம் எழுத அரசுடன்
போராடி வென்று இரண்டு அற்புத
படைப்புகளை கல்விதுறை வாழ
வழி செய்த பெருந்தகை என் காதலுக்குரிய
படைபாளி ஐயன் திருவள்ளுவனை எடுத்தாண்ட
அழகு பாருங்கள் " தலைவன் என்பவன் யார் என்று
கேட்டு அவனே பதிலாய் வள்ளுவனை
கையாண்ட அழகு காண்பீர்
" அகலாது அனுகாது தீக்காய்வார் போல..."

அடுத்து  ஔவை வழி நடத்திய அதியன்
ஆட்சி செய்த என் மாவட்டம் என
இம்மண்ணின் மைந்தர் எல்லாம்
இரும்பூது கொண்டு பொங்கும்
இளைஞர் கூட்டத்தினை
சலியாது தன் தோளில் சுமந்த
பேரறிவாளன் அற.பழனியாண்டி
அவனிடம் நான் கற்று ஒழுகும் நல்லதை
சொல்வேன் நீவீரும் பயனடைவீர்
" கருத்து வேற்றுமைகள் வேறு
   தனி மனித உறவுகள் வேறு..."

"WE CONTRAVENE ON MANY ISSUES
ALL ONLY TO FIND CORRECT REMEDIES
FOR ISSUES ON HAND TO BE SOLVED
IN A BETTER WAY FOR THE BENEFITOF
THE BENEFICIARIES ENTRUSTED TO OUR CARE
THAT'S ALL. APART FROM THAT WE ARE ALWAYS
FRIENDS, FAMAILY MEMBERS AND WHAT NOT.....
முடிந்தால்  பின் பற்றுங்கள் சோதர.....

அடுத்து சிரிப்பழகன்' அம்ம  'காரைக்குடியை
குடித்து வாழும் மண் வாசம் வீசும்
அவன் பெயர் மட்டும்தான் கருப்புச்சாமி
அவன் மனம் வெள்ளைச்சாமி எச்சபையிலும்
எடுத்துக் கூற எனக்கில்லை அச்சம். அவன் மொழி
இனிது இனிது மழலையினும் இனிது

"மனிதாபினம் மிக்க நிர்வாகம் மகிழ்ச்சியானது"
இக்கூற்றின் வாழும் உதாரண புருஷன் அவன்
முடிந்தால் அவரை பின்பற்று குழந்தாய்

அடுத்து கார் மேகம் கார் மேகக்கண்ணன்
குழல் இல்லை அவர் கையில்
அவரிடம் எல்லாம் உண்டு அவர்
தலைவனுக்கெல்லாம் தலைவன்
அவர் மொழி " திறன் அறி ஆசிரியர் தம்
திறனறி, அங்கீகரி, அனுமதித்து
ரசித்திரு ஆசிரியர்கள் உற்சாகமும்
உத்வேகமும் கொண்டு செயல் படும்
அழகை சுவாசி மகிழ்ச்சி கொள்"

முடிந்தால் இதயம் முட்ட முட்ட
கார் மேகத்தை உள் வாங்கி

'நடத்து உன் இராஜ்ஜியத்தை
பொதுவில் நடத்து" பாவேந்தர்.


"நான் எதுவும் இல்லை- உங்கள் முயற்சி
 உங்கள் வெற்றி கொண்டாடுங்கள்"
 திருமதி இராஜமணி கந்தக பூமி
பெற்றெடுத்த தவப்புதல்வி சேலத்து
பைங்கிளி என் அருமை தாய் அவள்
அனைத்தும் சொல்லிக்கொடுத்த ஞான குரு
என் காதல் சினேகிதி........... முடியுமா உன்னால்
முயன்று பார்.......
"பேசுபவரை கவனி - உற்றுப்பார்
உள் வாங்கு புரிதல் எளிதாகும்"
நான் பேசியதையும் உள் வாங்கி
என்னை தப்பிபோகச் செய்து மீளவும்
கல்வித்துறையில் என் ஆட்சி தொடர
வழி செய்த மாமனிதன் ஐயா
பெருமாள் சாமி!
 நீவீரும் இராமசாமி தான் நீவீர்
மாமனிதராய் விசுவ ரூபம் கொள்ளும்
நாளுக்காய் பிரார்திக்கிறேன் அன்புக்குழந்தையே!

அடுத்து தேர்வுத்துறையின் இயக்குனர்!

என்ன ஒரு வீச்சு என்ன ஒரு வேகம்
மனித எத்தனங்கள் நீர்த்துப் போகாமல் இருக்க
திட்டமிடல் மனித வேலை நாட்கள் இல்லை
மனித்துளிகள் வீணாகமலிருக்க ஓட்டைகள்
அற்ற திட்டமிடல் வேண்டும் என்பதை அழகாய்
செய்துக்காட்டி விட்டு போன பேரறிவு கொண்ட
இயந்திர மனிதன் இனி இபுவியை ஆளப்போகும்
நவீன ரோபோ மனிதன் அவரை இருக்கிப்பிடித்து
உச்சி முகர எழுந்த என் ஆசையை கைத்தட்டி
கவனம் ஈர்த்தேன் இதோ இன்னொரு கனியமுதன்
என்று ஆறுதல் கொண்டேன்..... முதல் நாள் பயிற்சியில்
நடராஜனின் கருத்தூட்டம் இல்லா 90 மணித்துளிகள்
400 தலைமையாசிரியர்களின் பொன் போன்ற காலங்கள்
அதை வீணடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது
உங்கள் பதவியின் அகங்காரம்...மன்னியுங்கள் ஐயா
மாவட்ட கல்வி அதிகாரியே அந்த நொடியிலும்
அதை பதிவு செய்தேன் அனைவரையும் எடுத்து
விழுங்கும் ஆவேசத்துடன் இருக்கிறேன் என்று.
போகட்டும் விடுங்கள் முனுசாமி சொன்னது போல்
இது உங்கள் கன்னி முயற்சி வீணில் செத்து மடியும்
கூட்டத்தில் ஒரு வித்தாய் விழுமக்கல்வி பற்றி
பேசிய அன்புச்சகோதரன் ஒரே ஆறுதல்


அவர் சொன்னது கேட்டீரா நவீன ராபின்வுட்கள்
அவர்கள் அடுத்தவனிடம் திருடி நல்லது செய்பவர்கள்
அவர்களை நம்பாதீர்கள் நம்மில் பலர் உண்டு.
நானும் அப்படி சிந்திப்பவள் தான் ஆனால் செய்தது இல்லை
எனக்கு  INSPIRE FUND DIVERSION வேண்டாம்.

எலி வலையானாலும் நல்ல வலையாய்
ஒன்றை எடுத்துக் கொண்டேன்  செய்யவென்று
அதை செய்து முடிப்பேன்.

இறுதியாய் ஒன்று ஐயா உங்கள் அருகில்
இருக்கும் பொன் குமார் " அணைந்து  கொள்
மக்களை அகண்டமாக்கு அறிவை மானிட
சமுத்திரம் நானென்று கூவு " பாவேந்தன்
பாடிய வரிகளின் நாயகன். அவனையும்
பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில்
" தகவல்  “ ஒரு பெட்டகம் அவன் தகவலின்
பெட்டகம்" குறைகளை சுட்டுபவர்கள் உன்
வளற்சிக்கு உரமிடுபவர்கள் அவர்களை உன்
அருகில் இருத்தி உறிஞ்சி ஆல் போல்
தழைத்து அருகு போல் வேரோடு
"நடு விரல் போல் தலை தூக்கு
என் நாட்டாரின் இன்னலை போக்கு"
என் ப்ரிய சினேகிதி சுலோச்சனா அம்மையாரின்
அன்புக்கணவர் கவிஞர் சுரதாவின் வரிகளுக்கு ஒப்ப
ஒரு மாவட்ட கல்வி நிர்வாகத்தை
முன்னெடுத்துச்செல்ல வாழ்த்துகிறேன்.


உன் சீறிய முயற்சிகள்

பல பல வெற்றிகளை பெற என்
அனுபவம் தன்னை உனக்கு தாரை
வார்த்திருக்கிறேன் அன்பின் செல்வனே
போய் வா நித்தம் பல வெற்றியுடன் திரும்பு
தோல்வியும் விமர்சனமும் கொண்டு
துவளாதே நீ ஜெயிக்கப்பிறந்தவன் என்பதை
மறவாதே என் கண் மணி  நீ இப்புவிதனை
ஜெயிப்பாய் ஜெயிப்பாய் என்னை போல்
பல்லயிரம் பேர் உன் முன்னும் பின்னும்

உண்டு. அனுபவப்பாடம் படி.

No comments: